முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம்,நாகபட்டினம் மீனவர்கள் 13 பேர் கைது

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த  ராமேசுவரம் மற்றும் நாகபட்டினம் பகுதிகளை சேர்ந்த 13 மீனவர்களை  அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் புதன் கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

 ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு அருகே பல பகுதிகளில் பிரிந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது புதன்  கிழமை நள்ளிரவில் அப்பகுதி வழியாக ரோந்த வந்த  காங்கேசன் துறை பகுதியை சேர்ந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர்க்கு சொந்தமான படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் படகிலிருந்து மீனவர்கள் முனியசாமி,கருப்பசாமி,சேகர்,நாகேஸ்வரன் ஆகிய நான்கு மீனவர்களையும்,அதுபோல நாகபட்டினம் பகுதியிலிருந்து வந்து கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 9 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 13 மீனவர்களையும் கைது செய்தனர்.இவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலையில் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.பின்னர் ஊர்க்காவல்துறை போலீஸாரிடம் 13 மீனவர்களையும் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களிடம் போலீஸார் விசாரணை செய்து  எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் மீனவர்கள் 13 பேரையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்