அரக்கோணத்தில் ஸ்ரீஸச்சிதானந்தா சாய்பாபா திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      வேலூர்
Dt 3   AKM POTO  02

       அரக்கோணத்தில் ஸ்ரீஸச்சிதானந்தா சாய்பாபா திருக்கோயில் மற்றும் தியான மண்டபம் மஹா கும்பாபிஷேகம் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம், கணேஷ் நகரில் பிரமாண்டமான முறையில் ஸ்ரீ ஸச்சிதானந்தா சாய்பாபா திருக்கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.     இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இரத்தினகிரி தவத்திரு பால முருகனடிமை சுவாமிகள் திருகரங்களால். ஸ்ரீ ஸச்சிதானந்தா சாய்பாபா திருக்கோயில் மற்றும் தியான மண்டபமும் ஸ்ரீசச்சிதானந்தா சாய்கணபதி மகா மேரு (சக்கரம்) மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.     மாலை 4.30 மணியளவில் வோதந்த இராமமூர்த்தி சுவாமிகளின் திருவிளக்கு புஜைகளும் நடந்தேறியது.   இந்த கும்பாபிஷேக விழாவில் அரக்கோம் எம்எல்ஏ சு.ரவி எம்பி.அரி காவல்துறை துணை கண்கானிப்பாளர் சக்திகணேஷ் டிஆர்.சுப்பிரமணியம்   பிஜி.மோகன்நாந்தி உள்ளிட்டதிரளான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழா ஏற்பாடுகளை ஸ்ரீராமசாயி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது, இந்த ஆன்மீக பணிகளில் வேலு, மற்றும் சசிகுமார் ஆகியோர் தீவர நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: