முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீதிரிசூலக்காளியம்மன் நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளியின் தாளாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஸ்டான்டா்டு பள்ளி தாளாளர் எ.செல்வம் விவேகானந்தா பள்ளி தாளாளர் எல்.பாஸ்கர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கே.தனமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை வனிதா வரவேற்றார். கண்காட்சியில் பள்ளி சிறார்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு, போக்குவரத்து விதிகள், செக்யூரிட்டி அலாரம், காற்றாலை மின்சாரம், மாற்று எரிபொருள் சக்தி, குறைந்த செலவில் அதிக பலன் தரும் சத்துணவுகள், இயற்கை மருத்துவம், பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை உருவாக்கி பார்வைக்காக வைத்திருந்தனர். அதனை பார்வையிட்ட பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறார்களை வெகுவாக பாராட்டினர். நிகழ்ச்சியில் சிறந்த படைப்புக்கள் அனைத்திற்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜீவிதா நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago