முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் பேரிடர் மேலாண்மை மற்றும் மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித்திட்டத்தின் சார்பில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள் நடைப்பெற்றன.கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித்திட்ட அலுவலர் டி.எஸ்.பத்மாவதி முன்னிலையில் நடைப்பெற்ற இப்பயிற்சியில் புயல்,மழை,வெள்ளம்,சுனாமி,தீ விபத்து உள்ளிட்ட பேரிடர்களின் போது முன்னெச்சரிக்கைகள்,மீட்பு பணிகள்,நிவாரணப்பணிகள்,பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும்,மன அழுத்தம் என்றால் என்ன,மன அழுத்ததிலிருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றியும் உதவியாளர்களுக்கு மிக விரிவாக தொடு சிகிச்சையாளர் முத்து பயிற்சியளித்தார். மேற்பார்வையாளர் -1 முனியம்மாள்,மேற்பார்வையாளர்-2 லோகநாயகி ஆகியோர் பயிற்சி ஏற்பாடு செய்தனர்.50 அங்கன்வாடி உதவியாளர்கள் பயிற்சியில் கலந்துக்கொண்டனர

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்