முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி நம் குழந்தைகள் இல்லம் எனும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடியில் சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் நம் குழந்தைகள் இல்லம் எனும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.இங்கு ஏராளமான குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழக வருவாய்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் பாய்,தட்டு உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக தமிழகளின் பாரம்பரிய கலாச்சாரத்தை விளக்கிடும் வகையில் நம் குழந்தைகள் இல்லத்து பள்ளிக் குழந்தைகளின் பறையடிக்கும் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.இதையடுத்து பறை இசைநிகழச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,கள்ளிக்குடி ஒன்றிய கழக செயலாளர் உலகாணி மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் கள்ளிக்குடி துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அன்னலட்சுமி,பிரபுசங்கர்,கள்ளிக்குடி ஒன்றிய அவைதலைவர் வேல்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வேல்ராமகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகர்,சார்புஅணி நிர்வாகிகள் எஸ்.பி.எஸ்.ராஜா,கூடக்கோவில் முருகன்,மருது,கட்சி நிர்வாகிகள் லிங்கசாமி,மணி,தாத்தப்பன்,தங்கராஜ்,மணி,தியாகராஜன்,பழனிச்சாமி, சின்னஇருளப்பன்,சீதாமதி கந்தசாமி,சரவணன்,சிவரக்கோட்டை ராஜா,ராமையா, மற்றும் சித்தர் கூட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்