முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டம் : கலெக்டர் டாக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டத்தின் கீழ் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நேற்று (03.03.2017) தொடங்கி வைத்தார்.

 

முதல் விற்பனை

 

இத்திட்டத்தில் முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:இந்திய ஜவுளி சந்தையில் 82 ஆண்டு காலமாக பிரதான பங்கு வகித்து வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வர்த்தக ரீதியில் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டும் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

2 வாங்கினால் 1 இலவசம் என்ற இந்த சிறப்பு விற்பனை திட்டத்திற்கு கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய பகுதி நெசவாளர்களின் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்ட இயற்கை சாயமிட்ட கைத்தறி பருத்தி கைத்தறி சேலைகளும், நெகமம் சேலைகளும், செட்டிநாடு சேலைகளும் மற்றும் கூறைநாடு சேலைகளும் கண்கவரும் விதத்தில் ஜெயகார்த்திகா சேலைகளும், கோ-ஆப்டெக்ஸின் புதிய வரவாக உள்ளது. அசல்பட்டு அசல் ஜரிகையுடன் முகூர்த்த பட்டு புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் தஞ்சை மண்டலத்தில் ரூ.246.39 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ.300.00 லட்சத்திற்கு விற்பனைக்குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் விற்பனை ரூ.63.03 லட்சம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு ரூ.77.00 லட்சத்திற்கு விற்பனைக்குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொதிகை விற்பனை நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.46.50 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ.56.00 லட்சத்திற்கு விற்பனைக் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற இந்த திட்டத்தின் மூலம் கைத்தறி ரகங்கள் அதிக அளவில் விற்பனை ஆவதால், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. எனவே அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, ஆதரவு நல்கிட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வேண்டிக்கொள்கிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

 

என்.மாதேஸ்வரன், சு.இராஜலட்சுமி மற்றும் மண்டல மேலாளர் செல்லையா, மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா.சீனிவாசன், மேலாளர் கே.ஆனந்தமுருகன், திருச்சி பொதிகை விற்பனை நிலையம் மற்றும் ஊழியர்களும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்