முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று (03.03.2017) நடைபெற்றது.

 

குடிநீர் விநியோகம்

 

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :-

அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் வங்கிகளிலிருந்து விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பேரூராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய துறை அலுவலர்கள் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் குளோரின் மற்றும் தூய்மையாக வழங்கவும்;, பொதுவிநியோக கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எவ்விதத்தட்பாடு இன்றி வழங்க கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகத்தை சீராக மேற்கொள்ள மோட்டார் பம்புகள், நீரேற்று நிலையங்களிலுள்ள இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களை தயார் நிலையில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்துள்ள மின்மோட்டார்கள் உடனடியாக சரிசெய்து மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் நீர்தேக்கத் தொட்டிகள், நீர் சேகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர்; இணைப்புகளில் அனுமதியின்றி மின்மோட்டார்களைக் கொண்டு குடிநீர் எடுக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி.பத்மஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்