முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த 24.01.2017 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், தலைமையில் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நேற்று (03.03.2017) ரிப்பன் மாளிகை வளாகத்தில் அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான கூட்டம் நடைபெற்றது.விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டவும், ஏற்கனவே உள்ள சிறிய, பெரிய மழைநீர் வடிகால்வாய்களை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல். மேலும், நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேகரித்து வெள்ளப்பெருக்கினை தடுக்கும் பொருட்டு ரூ.4034 கோடி மதிப்பீட்டில் 2014ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை திருவாளர்கள் டெட்ரா டெக் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. விரிவாக்கப் பகுதிகள் 1) அடையாறு 2) கூவம் 3) கோவளம் மற்றும் 4) கொசஸ்தலையாறு ஆகிய நான்கு வடிநிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடையாறு மற்றும் கூவம் வடி நிலப்பகுதிகளில் உலக வங்கி நிதியுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவளம் வடிநிலப் பகுதி 103.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் முக்கியமான நீர்நிலைகள் இல்லை. சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிறைந்த நிலங்களைக் கொண்டு சுற்றுச் சூழலைப் பொருத்தவரையில் எளிதில் பாதிப்படைய கூடிய தன்மை கொண்டதாகவுள்ளது.கோவளம் வடிநிலம் பள்ளிக்கரணை நீர்பிடிப்புப்பகுதி(எம்1), தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்புப் பகுதி(எம்2) மற்றும் தெற்கு கடற்கரை நீர்பிடிப்புப்பகுதி (எம்3) என்று மூன்று நீர்பிடிப்புப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்கு நிதி ஆதாரம் பெற தமிழக அரசின் மூலம் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து ஜெர்மன் நாட்டு வங்கியான கே.எப்.டபிள்யூ. என்ற வங்கியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ரூ.1243.15 கோடிகள் நிதி ஆதாரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்3 திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட வடிவமைப்பை சீராய்ந்து இறுதி வடிவம் கொடுப்பதற்கும், அதன் தொடர்ச்சியாக ஒப்பங்கள் கோருவதற்கும் ஜெர்மன் நாட்டு வங்கி மூலம் (கே.எப்.டபிள்யூ) அமர்த்தப்பட்டுள்ள நீராதாரங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகிய துறைகளில் வல்லமை பெற்றுள்ள சர்வதேச நிறுவனமான திருவாளர்கள் முடிஉமள ஊடிளேரடவயவே அவர்களை அமர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஜெர்மன் நாட்டிலிருந்து வந்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ரூ.143 கோடி மதிப்பிலான எம்3 திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு மிக விரைவில் இறுதி வடிவமைப்பை வழங்க ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தில் அடங்கும் பகுதிகளை ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு திங்கட்கிழமை முதல் மழைநீர் வடிகால் துறை பொறியாளர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதன்பின் ஏப்ரல் மாதத்தில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இக்கூட்டத்தில் துணை ஆணையர்(பணிகள்)(பொ) .எம்.கோவிந்த ராவ், முதன்மை தலைமை பொறியாளர் .எம்.புகழேந்தி, மேற்பார்வை பொறியாளர் (ம.நீ.வ.து) .எல்.நந்தகுமார், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மைக்கேல் பிரிங்க்மேன், டாக்டர்.தீபக் கஜூரெல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்