முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 பொதுதேர்வு: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற    பிளஸ் 2 பொது தேர்வு (தமிழ் முதல் பாடம்) கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்    நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.        =பின்னர்  செய்தியாளர்களிடம்  கலெக்டர் தெரிவித்ததாவது:-தமிழகத்தில் இன்று 02.03.2017 தொடங்கி 31.03.2017 அன்று வரை பிளஸ் 2 பொது தேர்வுகள் காலை 10 மணி முதல் முற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை கல்வி மாவட்டத்தில்  88 பள்ளிகளும் (26 தேர்வு மையங்கள்), குழித்துறையில் 76 பள்ளிகளும்  (28 தேர்வு மையங்கள்),  நாகர்கோவிலில்  66 பள்ளிகளும்                   (24 தேர்வு மையங்கள்) என மொத்தம் 3 கல்வி மாவட்டத்தில் 230 பள்ளிகளில் (78 தேர்வு மைங்கள்) தேர்வுகள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11,783 மாணவர்களும், 13,904 மாணவிகள் என மொத்தம் 25,687 மாணவ, மாணவியர்கள் இவ்வருடம் தேர்வினை எழுதுகிறார்கள். மேலும் பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக,  சொல்வதை எழுதுபவர் (ளுஊசுஐடீநு) பணிக்காக 17 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில்                   1 மாணவரும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 7 மாணவர்களும், குழித்துறை கல்வி மாவட்டத்தில்               9 மாணவர்களும் என மொத்தம் 17 பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் எந்த ஒரு இடைய+றுமில்லாமல் சிறப்பாக நடைபெற காவல்துறையின் மூலம் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  எஸ்.பாலா (பொ),அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்  அருளரசு, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்