முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேர்வு கலெக்டர் எம்.ரவி குமார் பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் மேல்நிலைத்தேர்வை கலெக்டர் எம்.ரவி குமார் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 53அரசு பள்ளிகளின் 2191 மாணவர்களும், 3266 மாணவிகளும் மொத்தம் 5457, 83 அரசு உதவி பெறும் பள்ளிகளின் 5676 மாணவர்களும், 7037 மாணவிகளும் மொத்தம் 12713, 45 தனியார்  பள்ளிகளின் 1651 மாணவர்களும், 1698 மாணவிகளும் மொத்தம் 3349, மொத்த  181 பள்ளிகளின் 9518 மாணவர்களும், 12001 மாணவிகளும் மொத்தம் 21519 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். தனிதேர்வர் பள்ளிகள் 3 மூலம் மொத்த மாணவஃமாணவியர்களின் 485 தேர்வு  எழுதுகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 21519, தனித்தேர்வர்களாக 485 மாணவஃமாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். அத்தேர்விற்கு 20 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேர்வுக்குரிய வினாத்தாள் கட்டுக்களை 17 வழித்தட அலுவலர்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தேர்விற்கு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்திட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தலைமையில் 150 ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உதவிக் கண்காணிப்பாளராக 1125 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டள்ளனர்கள். இம்மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 16 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மைய வளாகத்தினுள் தேர்வர்கள் அலைபேசிகளை எடுத்துவர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரை தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பொருந்தும், தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்வர். வருவாய் துறை அலவலர்களும் பறக்குபடையாக செயல்படுவார்கள் என கலெக்டர் எம்.ரவி குமார்  கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்