மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேர் திருவிழாவில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      விழுப்புரம்
DSC 0500

 

  • செஞ்சி,
  • விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித்தேர் திருவிழா வியாழன் அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிப்பெருவிழா ஏழாம் நாளான வியாழன் அன்று திருத்தேர் வடம் பிடித்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து அங்காளம்மன் அருள் பாலித்தார். மாலை 4 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் பல்வேறு வித மலர்களால் அலங்கரிப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர்  5 மணி அளவில் திருத்தேரினை கூடியிருந்த பக்தர்கள்  வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரசு போக்கு வரத்து கழகம் ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கியது. பாதுகாப்பு பணியில்  மாவட்ட காவல் துறை நிர்வாகமும் மற்றும் ஊர்காவல் படையினர் மற்றும், தீ யணைப்பு படையினர், சுகாதார துறை உள்ளிட்ட துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன்,திருக்கோயில் உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், ஏழுமலை பூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நீதிபதி சுதா, செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், அன்னியூர் சிவா, பாக்கம் முன்னாள் தலைவர் செல்வக்குமார் மேலாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: