முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சிறுபான்மையினர் ஆணைய ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாரிய தலைவர் பேராயர்.டாக்டர்.எம்.பிரகாஷ் தலைமையில் மாவட்ட கலெக்டர் .ச.ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சிறுபான்மையினர் ஆணைய ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  வாரிய தலைவர் பேராயர்.டாக்டர்.எம்.பிரகாஷ்  தலைமையில் மாவட்ட கலெக்டர் .ச.ஜெயந்தி  முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது :

          தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு, அரசு நிதிஉதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார்  கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அதே போல் வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட இஸ்லாமிய மகளிர் மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கம் துவங்கி செயல்பட்டு வருகிறது.  இச்சங்கத்தால் திரட்டப்படும் நன்கொடை நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்கள் மற்றும் மதராஸாகளின் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இவ்வாரியத்தில் நாளது வரை 198 உறுப்பினர்களுக்கு விலையேதுமில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

          மேலும், ஜெருசலேம் புனித பயணத்திற்கான தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள சிறப்பு நிதியுதவியாக ரூ.20,000/- வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.  2015-2016 ஆம் ஆண்டில் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 52 நபர்களுக்கு 42.30 லட்சத்திற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  படித்து வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிகள் தமிழக அரசின் நிதி உதவியோடு அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.  இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு நிதியுதவி அளிக்கப்படுகிறது.  இந்த உதவி பெற இனக்கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்றிருத்தல் வேண்டும்.  விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் கிராமப்புறம் ரூ.40,000/-க்கு மிகாமலும், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

                இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பழனியம்மாள், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago