முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாக்காளர்கள் இ_சேவை மையங்களில்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      நீலகிரி

புதிய வாக்காளர்கள் குறுஞ்செய்தியை காண்பித்து இ_சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

                                           19,121 விண்ணப்பங்கள்           

2017 ஜனவரி 1_ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்தாண்டு செப்டம்பர் 1_ந் தேதி வரைவுப்பட்டியல் வெளியூட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் 20,351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 19,121 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.  கடந்த ஜனவரி 5_ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவற்றின் காரணமாக 18,550 பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

                                      இலவச அடையாள அட்டை

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது தரவுகள் தொகுக்கப்பட்டு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்தாண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு புதிய வாக்காளர்களுக்கு இ_சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை தங்களின் பகுதிக்கு அருகில் உள்ள அரசு கேபிள் டிவி இ_சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

                                    கட்டணமில்லா தொலைபேசி 1950

தங்களுடைய கைப்பேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950_ஐ தொடர்பு கொண்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள சான்றை காண்பித்து இ_சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago