முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் மீனவர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு.

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- மன்னார் வளைகுடா கடல் பகுதசியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை  அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

  பாம்பன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலையில் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் ஆழ்கடலில் பிரிந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது வியாழக்கிழமை இரவு அப்பகுதி வழியாக ரோந்த வந்த தலைமன்னார் பகுதியை சேர்ந்த இலங்கை கடற்படையினர் பாம்பன் பகுதியை சேர்ந்த ஜெபமாலை என்பவர்க்கு சொந்தமான படகை சுற்றி வளைத்தனர்.பின்னர் படகிலிருந்து மீனவர்கள்அஸ்கார்,கிரிஸ்டோபர்,மெஸ்கிரன்,மரியரூபன்,பிரகாஸ் ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர் இவர்களின்  படகுகை பறிமுதல் செய்தனர்.அதன் பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.பின்னர் தலைமன்னார் போலீஸாரிடம் 5 மீனவர்களையும் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களிடம் போலீஸார் விசாரணை செய்து  எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி அலெக்ஸ்ராஜா இம்மாதம் 17 ஆம் தேதி வரை  நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் மீனவர்கள் 5 பேரையும் போலீஸார் வவுனியா சிறையில் அடைத்தனர்.                                                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago