முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் இலவச சைக்கிகளைமாணிக்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.  இதில் மாணவ&மாணவிகளுக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தலைமைதாங்கி இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார், பள்ளியின் தலைமையாசிரியர்கள் பிராக்ரன்ஸ்லதா, இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் சேதுசீனிவாசன், பாலாஜி, தெய்வம், பாரி, ராஜேஸ்கண்ணா, காளிதாஸ், சத்தியமுர்த்தி, ராசு, பெரியசாமி, முர்த்தி உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். துணைதலைமையாசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக எம்.எல்.ஏ., பேசியதாவது, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரு.10 ஆயிரம் வழங்கப்படும். இதேபோலவே 2&வது மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு ரு.5 ஆயிரம் வழங்கப்படும். இதே பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு ரு.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 2 பள்ளிகளிலும் சுமார் 274 சைக்கிள்கள் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago