முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளிக்குடியில் ரூ.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டுமானப்பணிகள் : வேளாண் வணிகத்துறை ஆணையர் சிரு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் கள்ளிக்குடியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம்; ரூபாய் 65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களுக்கான ஒருங்கிணைந்த வணிக வளாக கட்டுமானப்பணிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர், சு.ஐ.சிரு, பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, உடனிருந்தார்.

வணிக வளாகம்

 

 

ஒருங்கிணைந்த வணிக வாளாகத்தில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்கு, 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொணட இரண்டு தரம்பிரிப்பு கூடங்கள், 19 பிளாக்குகளில் அமைக்கப்பட்டுள்ள 1000 கடைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

 

குளிர்பதன கிடங்கினில் விளைபொருள் இருப்பு வைத்து பயன்படுத்தப்படும் விபரம், தரம்பிரிப்பு மைய பயன்பாடு, வெவ்வேறு பிளாக்குகளில் கட்டப்பட்டுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் விளைபொருட்கள் வரவு, விளைபொருள்; வாரியாக கடைகள் ஒதுக்கீடு, வணிக வளாகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் இடையூரின்றி பொருட்களை கடைகளை கொண்டு சேர்க்கும் முறைகள், கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு, இருசக்கர, இலகு மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பயன்பாடு குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

வணிக வளாகத்தில், உணவகம் அமைப்பு மற்றும் பயன்பாடு, வண்pக வளாகத்தில் சேரும் குப்பைகள் சேகரம் மற்றும் அப்புறப்படுத்துதல், வங்கி செயல்பாடு மற்றும் காவலர் பணியிடங்கள் தேவை விபரம் முதலியவை குறித்தும் அலுவலர்களுக்கு ஆணையர் ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்) எம்.முகமது இக்பால், வேளாண்மை இணை இயக்குநர் உதுமான் மொகிதீன், திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கைலாசபதி, வேளாண்மை விற்பனை வாரிய செயற்பொறியாளர் ஜி.விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பி.செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago