முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெ.எஸ் மாணவர்கள் சிறுவாபுரியில் 7 நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      சென்னை

: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக சிறுவாபுரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமை துவங்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆரணி அருகே உள்ள சிறுவாபுரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமை நடத்தி வருகின்றனர். மார்ச்-4ஆம் தேதி முதல் மார்ச்-10ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி ஆலய வளாகத்தில் நடைபெற்ற முகாமில் துவக்க விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரியின் இயக்குனர் தினேஷ், முதல்வர் பிச்சைமணி, நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர். சோழவரன் முன்னாள் கவுன்சிலர் எம்.பகலவன், ஏ.என்.கே.ஜெயமோகன் ,சி.எம்.பார்த்தசாரதி நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர். முகாமின் துவக்க நாளன்று அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஆலயத்தின் திருக்குளம் சுத்திகரிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து முகாமில் இலவச கண் சிகிச்சை முகாம், மாணவர்களின் களப்பணிகள், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த விளக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். முகாம் முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்