முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

  • திருச்செந்தூர்,
  •  
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 4&ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 1&ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்பாள் காலை-யும், மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவின் 4&ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், 4 ரதவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்