வீடியோ மூலம் கற்பிக்கும் செஞ்சி அரசு பள்ளி ஆசிரியர்: தேசிய அளவில் நான்காம் இடம்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      விழுப்புரம்

செஞ்சி,

 

தேசி்யஅளவிலான ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான வீடியோ போட்டியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தகவல் தொழில்நுட்பத்தை பரவலாக்க ஏற்படுத்தியுள்ள ஐ.சி.டி அகாடமி என்னும் நிறுவனம் சென்னையை தலைமை இடமாக் கொண்டு செய்ல்படுகிறது.இந்நிறுவனம் நாடு முழுவதும் வீடியோ மூலம் சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் பேராசிரியர்களை இனம்காண போட்டியை அறிவித்து. இப்போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 1835 ஆசிரியர்களும் பேராசிர்யர்களும் தாங்கள் வீடியோக்களை அனுப்பியிருந்தனர்.இதில் முதல்கட்டமாக நடுவர்கள் 325 வீடியோக்கள் தேர்வு செய்தனர் .அடுத்தக்கட்டமாக அதிலிருந்து 25 வீடியோக்களும் கடைசியாக அதிலிருந்து சிறந்த பத்து வீடியோக்களை தேர்வு செய்து மக்கள் வாக்கெடுப்புக்கு இணையத்தில் வைத்தனர். அதில் அரசு பள்ளி ஆசிரியர்களின்வீடியோக்கள் முதல் பத்து இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தை சென்னை செய்ண்ட் ஜான்ஸ் பள்ளி ஆசிரியை குருவம்மாளும் ,இரண்டாமிடம் கர்நாடக மாநில பேராசிரியை லக்ஷ்மி ஷபாதாவும் மூன்றாமிடம் கேரள மாநிலப் பேராசிரியர் விபின் கோபனும் நான்காம் இடம் அரசு மேல் நிலைப் பள்ளி செஞ்சி சத்தியமங்கலம் ஸ்ரீ.திலிப், ஏழாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி ரூபி தேரசாவுக்கும் வழங்கப்பட்து. அரசு பள்ளிகளைச் சார்ந்த இரண்டு ஆசிரியர்களையும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் பெரிதும் பாராட்டினர். அரசு மேல்நிலைப் பள்ளி சத்தியமங்கல ஆசிரியர் ஸ்ரீ.திலிப் சமச்சீர் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கு தயாரித்த வீடியோவில்அனிமேஷன்கள், நுண்ணோக்கி மூலம் தாவரச் செல்,விலங்கு செல்களை இணைத்து அனைவரின் வரவேற்பையும் பெற்றது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியை ரூபிதெரசா தயாரித்த உருளையின் வளைபரப்பும் கன அளவும் என்னும் கணித வீடியோவும் எளிமையாக கணிதத்தை கற்கும் விதமாக இருந்ததென அனைவரும் பாராட்டினர். பரிசுபெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை சோழா நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடந்தது. முதல் பத்து இடத்தை பிடித்தவற்களூக்கு சான்றிதழும் பரிசும் மென்பொருள் நிறுவனத் தலைவர் அன்பு இரத்தினவேல்மற்றும் சிவக்குமார் ஆகியோர் வழங்கி கௌரவபடுத்தினர்.

 

 

 

 

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: