முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை, மதுரை பாசஞ்சர் ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வரை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் நேற்று முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வாரத்தில் 2 நாட்கள் செங்கோட்டையில் இருந்து இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 16181) புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 8.13 மணிக்கு சங்கரன்கோவிலுக்கும், 8.27 மணிக்கு பாம்புகோவில் சந்தைக்கும், 8.40 மணிக்கு கடையநல்லூருக்கும், 9 மணிக்கு தென்காசிக்கும் வந்து செங்கோட்டை ரெயில் நிலையத்தை அடைகிறது.மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து (வண்டி எண் 16182) வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் தென்காசி சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு 4.12 மணிக்கும், கடையநல்லூருக்கு 4.29 மணிக்கும், பாம்புகோவில் சந்தைக்கு 4.42 மணிக்கு, சங்கரன்கோவிலுக்கு 4.56 மணிக்கும் வந்து செல்கிறது.

இதையொட்டி செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு மாலை 3.30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் 10 நிமிடங்கள் முன்னதாக, அதாவது 3.20 மணிக்கு புறப்படுகிறது. அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு பதில் 5.40 மணிக்கு வந்து சேருகிறது. இதே போல் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு மாலை 3.50 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் 10 நிமிடங்கள் முன்னதாக அதாவது 3.40 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மதுரைக்கு வழக்கமான நேரமான இரவு 7.35 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago