முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து வாசகம் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-  மாவட்ட ஆட்சித் தலைவர் .அ.சிவஞானம், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் டைபெற்றது.பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து வாசகம் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 3 பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழக அரசின் நலத் திட்டங்கள் பெறுவது தொடர்பாகவும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் மனுக்களை பொதுமக்களிடமிருந்து  நேரடியாக பெற்றுக் கொண்டார். பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், தனிநபர் வழங்கிய மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் தங்களுக்குரிய அனைத்து கோப்புக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மனுக்கள் நிலுவை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பெறப்படும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரனை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர், கூட்டத்தில் சமூகநலத் துறையின் மூலம் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து வாசகம் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 3 பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளையும், புதுவாழ்வுத்திட்டத்தின் மாநில அளவில் பாரா சிறப்பு தடகளப்போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் பதக்கங்களை வென்ற எஸ்.அஜித்குமார், பி.மணிமுத்து, கே.ராமலட்சுமி, கே.சுபலட்சுமி ஆகிய 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000ஃ- மதிப்பிலான ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து, 06.03.17முதல் 09.03.17 வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சா.ப.தி) .முருகேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .தனலிங்கம், சமூக நலத்துறை அலுவலர் மதி.பவீஜான்சிராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .கனகராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .இரா.ஜெயஅருள்பதி, புதுவாழ்வுத்திட்டம் மாவட்ட திட்ட மேலாளர் .சண்முகராஜ், உதவி திட்ட மேலாளர் .ராஜகுமார் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்