சேலத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா மேடைப்பணிகள் அரசு செயலர் பி.அமுதா ஆய்வு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      சேலம்
2

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை 07.03.2017 சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொண்டு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பான விழா முன்னேற்பாடு பணிகளை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு செயலர் பி.அமுதா, ஆய்வு செய்து, அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வா.சம்பத், முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து விழாவிற்கு சிறப்புரையாற்ற வருகை தரவுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் 462 பணிகள் ரூ.115.71 கோடி மதிப்பிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1,479 பணிகள் ரூ.61.25 கோடி மதிப்பிலும், தருமபுரி மாவட்டத்தில் 113 பணிகள் ரூ.60.33 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,917 பணிகள் ரூ.93.55 கோடி மதிப்பிலும் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக கலெக்டர் வளாகத்தை தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறையின் சார்பாக விழா ஏற்பாடுகளை விரைந்து முடித்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) செல்வம், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், பொதுப்பணித்துறை செயலாளர் துரைசாமி மற்றும் அனைத்துறை அரசு முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: