கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேலை வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 191 - மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 மனுக்களும் ஆக மொத்தம் 198 - மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். முன்னதாக பர்கூர் வட்டம் வரட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுகந்தி கணவனால் கைவிடப்பட்டவர் என்பதால் இரு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலையில் வறுமை நிலையில் இருப்பதால் தனக்கு குடும்ப அட்டை மற்றும் மாதந்திர உதவித்தொகை வேண்டி மனு அளித்ததின் பேரில் குடும்ப அட்டை மற்றும் மாதந்திர உதவித் தொகைக்கான ஆணையை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) (சமூக பாதுகாப்பு திட்டம்) ரகு குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், பர்கூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: