முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் இன்று விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி :அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் பங்கேற்கிறார்கள்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      வேலூர்

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் வறட்சி நிவாரண நிதி வழங்குவதை துவக்கி வைக்கவும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் மானிய விலையில் உலர் தீவனங்கள் வழங்குவதை துவக்கி வைக்கவும் உள்ளார்கள்.வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 07.03.2017 (செவ்வாய்கிழமை) காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த வறட்சி நிவாரணத் தொகை மற்றும் விவசாயிகளுக்கு விதைகள், உபகரணங்கள் மேலும் கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளக்கு பயிர்க்கடன்களை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்களும் வழங்க உள்ளார்கள்.அதனை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் வேலூர் கோட்டை பின்புறம் உள்ள இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வறட்சி காலத்தில் மானிய விலையில் உலர் தீவனங்களை வழங்கும் துவக்க விழாவில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் விற்பனையை துவக்கி வைக்கின்றார்கள் என்று கலெக்டர் அவர்கள் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்கள்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்