முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் பயணி சங்கத்திற்கு 1000 உறுப்பினா் சேர்ப்பு பணி தீவிரம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      வேலூர்

அரக்கோணம் ரயில் பயணி சங்கத்தில்; 1000 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் தீவிர சுற்று பயணத்தில் சங்க நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரத்தின் மைய பகுதியில் ரயில் நிலையம் அமைந்து உள்ளது. எனவே, வர்த்தகர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர் பள்ளிகல்வி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், விவசாயிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் என்று தினந்தோறும்;; ஆயிரகணக்கில் மக்கள் ரயிலிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். ஏனெனில் மக்களின் பிரதான போக்குவரத்திற்கு ரயில் ஒனறையே நம்பி உள்ளனர். இந்நிலையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான வசதி வாய்ப்புகள் அதிகபடுத்தாமல் இருப்பதாக குற்றசாட்டு ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. எனவே, வசதி வாய்ப்புகளை பெற்றிட 1992ஆம் ஆண்டே 100 உறுப்பினர்களுடன் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் உதயமானதாக கூறப்படுகிறது. தற்போது இச்சங்கம் பலமிக்க சங்கமாக செயல்படுகிறது என்று கூறப்பட்டாலும். 1000 உறுப்பினர்கள் கொண்ட பலமிக்க சங்கமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு இருப்பதாக தெரியவருகிறது. இதற்காக சங்கத்தின் தலைவர் நைனாமாசிலாமணி, சிவக்குமார், விஜயன், மோகன்ராஜ், முனிபிரசாத் ஆகியோர் பொது செயலாளர் ஜெ.கே.ரகுநாதன் தலைமையில் கூட்டாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது. இது தொடர்பாக சங்கத்தின் பொது செயலாளர் ஜே.கே.ரகுநாதனை செய்தியாளர்கள் சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது. தென்னக ரயில்வேயில் பல பெரிய ரயில் நிலையங்கள் இருந்து வந்தாலும் அதிக மக்கள் ரயிலை மட்டும் நம்பி வாழக்கூடியவர்கள் அரக்கோணம் மற்றும் சுற்றி உள்ள மக்களே அதிகம். எனவே, அதிக பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு துவக்கபட்ட சங்கத்தை மேலும், பலமிக்க சங்கமாக உருவாக்க திட்டமிட்டு 1000 உறுப்பினர்கள் சேர்க்கும் உன்னத பணியில் இறங்கி விட்டோம். இதற்காக ஒவ்வொரு வாரம் ஞாயிற்று கிழமைகளில் தீவிர உறுப்பினர் சேர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நிச்சயம் தென்னகத்தில் பலமிக்க ரயில் பயணி சங்கமாக மாற்றுவதுடன் முன்மாதிரி சங்கமாக தென்னகத்தில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் திகழ போவது உறுதி. அப்பொழுது அனைத்து கோரிக்கைகளையும் வென்று காட்டுவோம் ஒன்று பட்டு. இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்