முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆய்வுக் நடந்தது

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை, ரயில்வே துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று (06.03.2017) நடைபெற்றது.

 

 

100 சதவீதம்

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,

சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் 100 சதவிகிதம் சீமை கருவேல மரங்களை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீமை கருவேல மரங்கள் உள்ள இடங்களில் 40 அடி ஆழம் வரை பூமிக்கடியில் வேர் சென்று பூமியில் உள்ள நீரை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. சீமை கருவேல மரங்கள் வளரும் இடங்களில் மற்ற மரங்கள் வளரவிடாமல் தடுக்கப்படுகிறது. சீமை கருவேல மரங்கள் விடும் காற்று மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளதாலும், இந்த கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லணைக் கால்வாய் பகுதி, ரயில்வே தடப்பகுதி, மத்திய மாநில அரசு அலுவலகங்களில் காலியிடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் தனியார் சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற டாம் டாம் தண்டோரா மற்றும் சீமை கருவேல மரம் தனி நபர் நிலத்தில் அகற்றப்படாமல் இருப்பதை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனியார் நில உரிமையாளர்கள் நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற இதுவரை தனி நபர்களுக்கு ஏன் அகற்றப்படவில்லை என்று விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நோட்டீல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே பள்ளி, கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடகங்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவரவர்கள் நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை மக்களே முன் வந்து அகற்ற வேண்டும். வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவர்களுடன் இணைந்து மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் முழுமையாக அந்தந்த பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்ற முடியும்.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலர், தேசீய சாரணர் படை மூலம், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து சீமை கருவேல மரங்கள் அகற்றிட வேண்டும். ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர், அனைத்து வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago