முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் : கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் வழங்கினார்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      பெரம்பலூர்

தமிழக அரசின் சிறப்புத்திட்டமான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று(06.03.2017) கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் விழா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கி. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

 

மடிக்கணினி

 

விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி கல்லூரி முதல்வர் பேசியதாவது:தமிழக அரசு கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளும் மிகச்சிறந்த உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் வசதிப்படைத்த மாணவ, மாணவிகளைப்போல் ஏழை, எளிய மாணவர்களும் மடிக்கணினிகளை பயன்படுத்தி தங்களின் உயர்கல்வியை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி வருகின்றது. எனவே மாணவ, மாணவிகள் இதனை நன்கு பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பியல் துறை தலைவர்(பொ) ஏ.பாலசுப்பிரமணியன், கணிதத்துறை தலைவர்(பொ) பி.செல்வக்குமார், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் பி.சுசிலா, கல்லூரி விரிவுரையாளர் மா.விஷ்ணுவரதன் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்