முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நறிக்குறவர் பகுதியில் வனத்துறை சார்பில் மரம் நடுதல் மற்றும் மாலை நேர வகுப்பு துவக்க விழா

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலூர் நறிக்குறவர் பகுதியில் சுமார் 50த்திற்கும் மேற்பட்ட நறிக்குறவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நறிக்குறவர் வசிக்கும் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டு வந்த நிலையில் காஞ்சி மாவட்ட வனத்துறை சார்பில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் பம்பு பொருத்தித்தரப்பட்டு நறிக்குறவர்கள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கப்பட்டது. மேலும் நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்தினை சுற்றிலும் பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டனர். மேலும் நறிக்குறவர்களின் மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, ஸ்கூல் பேக் போன்றவைகள் வழங்கி மாலை நேர வகுப்பு துவங்கப்பட்டது. அதற்கான இடம் அமைத்து ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டது. மாலை நேரப் பள்ளி துவங்கப்பட்டவுடன் மாணவ-மாணவியர்கள் ஆர்வத்தோடு மாலை நேர வகுப்புக்கு சென்றனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட வன அலுவலர் ரிக்டோசிரியாக் தலைமை தாங்கினார். வனச் சரக அலுவலர் சிவபெருமான் முன்னிலை வகித்தார். வனக்காப்பாளர் ஒ.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நரிக்குறவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்