முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாம்பன் பகுதி மீனவர்கள் 5 பேரை விடுவிக்க கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாம்பன் பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை மீனவர் ஜெபமாலை என்பவர்க்கு சொந்தமான படகில்  அஸ்கார்,கிரிஸ்டோபர்,மெஸ்கிரன்,மரியரூபன்,பிரகாஸ் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் இந்திய கடல் பகுதியில் தென்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்களின்  படகை பறிமுதல் செய்து படகிலிருந்து மீனவர்களை கைது செய்தனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.இதனை தொடர்ந்து இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி வந்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்தும்,கைது செய்யப்பட்டு மீனவர்களை விடுதலை செய்யகோரியும்  பாம்பன் பகுதி மீனவர்கள் பாம்பன் பேருந்து நிலையம் பகுதியில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவ சங்க தலைவர் சிப்பிஜேசு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டு மீனவர்கள் கோரிக்கையை  மத்திய,மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் வகையில் கோஷமிட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாம்பன் மீனவ சங்க தலைவர்கள் எமரிட்,பேட்ரிக் உள்பட மீனவர்களும்,பாம்பன் பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

 

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago