முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.77.65 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் துவக்கி வைக்கிறார் கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி

 

வருகிற 8ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.77.65 கோடி மதிப்பிலான 794 திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளதாக ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 8ம் தேதி நெல்லையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதில், நாகலாபுரம் கலை அறிவியல் கல்லூரி, சிலோன் காலனியில் மக்கள் குடியிருப்பு, கோவில்பட்டி ஹாக்கி மைதானம், தூத்துக்குடி விளையாட்டு விடுதி உள்ளிட்ட ரூ.77.65 கோடி மதிப்பிலான 794 திட்டங்களை துவக்கி வைக்கிறார். பாபநாசம் அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. வருகிற 30ம் தேதி வரையிலான குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்யும். தாமிரபரணி ஆற்றில் இரண்டரை அடிக்கு மேல் தண்ணீர் ஓடினால் மட்டுமே திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளுக்கும் அனல்மின் நிலையத்திற்கும் தொழிற்சாலை தண்ணீர் வழங்க முடியும். திருச்செந்தூர் மாசி திருவிழாவை முன்னிட்டு 250 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் திறந்தவிடப்பட்ட தண்ணீரில் 116 கன அடி தண்ணீர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட நீக்கப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தண்ணீர் தேவைகளை குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து வல்லூநர் குழு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வழங்க முடியும் என மாவட்ட நிர்வாகம் அவர்களிடம் தெரிவித்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3,82,376 குழந்தைகளில் இதுவரை 1,51,076 குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 40 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் பின் விளைவுகள் எதுவும் இருக்காது என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago