முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் நாளை வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி

 

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 08-03-2017 அன்று வருகை தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் - கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 08.03.2017 அன்று வருகை தர உள்ளார்கள். அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி சாலை கே.டி.சி. நகர், மாதா மாளிகையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு துறைகளின்கீழ் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள். அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறைகளில் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து தெரிவிக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியலையும் உடனடியாக தயார் செய்து வழங்க வேண்டும்.தமிழ்நாடு முதலமைச்சர் விழாவின்போது பயனாளிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் மற்றும் விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விழாவினை சிறந்த முறையில் நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பேசினார். இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் திருஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம். , உதவி ஆட்சியர் (பயிற்சி) சாருஸ்ரீ, இ.ஆ.ப., செய்தித்துறை இணை இயக்குநர் (களவிளம்பரம்) சிவ.சு. சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாநரகாட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் (திருநெல்வேலி) பெர்மி வித்யா, (தென்காசி) வெங்கN;டஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;. அதனைத்தொடர்ந்து கலெக்டர் மு.கருணாகரன் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் மாதா மாளிகைக்கு நேரில் சென்று விழாப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், தென்னக இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாப்புலர் முத்தையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சாருஸ்ரீ, இ.ஆ.ப., செய்தித்துறை இணை இயக்குநர் (களவிளம்பரம்) சிவ.சு. சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வருவாய் கோட்டாட்சியர்; (திருநெல்வேலி) பெர்மி வித்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர், முக்கிய பிரமுகர்கள் கபேரியல் ராஜா, ஸ்ரீவை சின்னதுரை, சேர்மபாண்டி, பரமசிவ ஐயப்பன், கிருஷ்ணமூர்த்தி பாண்டியன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்