முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் வணிகவரித்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அரசின் சீரிய செயல்பாட்டின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி ஆதாரம் திரட்டவிதத்தில் இந்த ஆண்டிற்கு ரூ.478.26 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்ச

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் வணிகவரி அலுவலக கூட்டரங்கில் மண்டல அளவிலான வணிகவரித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்குமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் உயர் கே.சி.வீரமணி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அமைச்சர்  கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்.

           அம்மா அவர்களின் அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்தி மாநில அரசுக்கு வணிக வரிகள் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரம் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான ஆதாரமாகவும், திகழ்ந்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2016-2017 ஆம் நிதியாண்டில் ஜனவரி 2017 மாதம் வரை ரூ.3667.34 கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி 2015-16ல் இதே காலத்தில் வசூலான ரூ.3189.08 கோடிகளுடன் ஒப்பிடும்போது ரூ.478.26 கோடிகள் கூடுதல் வருவாய் ஆகும். அதாவது 15மூ வளர்ச்சி வீகிதத்தை அடைந்துள்ளது.

          2016-17 ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப்பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிகவரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரிவருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்டவேண்டும். மொத்த வணிகர்கள் எண்ணிக்கையில் 87மூ  வணிகர்கள் நமூனாக்களை இணையம் மூலமாக தாக்கல் (ந-கடைடiபெ) செய்துள்ளார்கள். மேலும் மொத்த வரி வருவாயில் 95மூ க்கு மேல் இணையம் மூலமாக (ந-pயலஅநவெ) பெறப்பட்டுள்ளுத.

          வணிகவரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும் போலிவணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும். தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரிவருவாயினை அதிகப்படுத்த வேண்டும். மேலும், எதிர்மறை வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அறியப்படும் வணிக இனங்களில் கூர்ந்தாய்வு செய்து காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையிலுள்ள வரி வருவாயை வசூலிக்க வேண்டும். மேலும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசு வருவாயை பெருக்க வேண்டும்.

           தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்களுக்கு நமது துறையின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் முக்கியப்பங்காற்றுவதால் நமது துறையின் பணிகள் மிகவும் அர்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  தெரிவித்தார்.

                இக்கூட்டத்தில் வணிகவரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மிசித்தார்த் ஜகடே,  அனிஷ்சேகர்  கூடுதல் ஆணையர்கள் ரத்தினசாமி, கர்வர்ஆலம் மற்றும் வணிகவரித்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்