முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் பகவதியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      தேனி
Image Unavailable

தேனி -  பெரியகுளம் வடகரையில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா கடந்த 28ம் தேதியன்று சாட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஜமீன்தார் மாச்சி ராமபத்ரன் குடும்பத்தார் மண்டகப்படியான கடந்த திங்கட்கிழமையன்று யானை வாகனத்திலும், தேவாங்கர் மண்டகப்படி, கம்மாளர் சமூகத்தார் மண்டகப்படி, யாதவர்; சமூகத்தார் மண்டகப்படி, கள்ளர் தெரு முக்குலத்தோர் சங்கத்தினரின் மண்டகப்படி ஆகிய   நாட்களில் காளை வாகனத்திலும், போஜம நாயுடு வகையறா மண்டகப்படியான இன்று அன்னபட்சி வாகனத்திலும், வெள்ளிக்கிழமையன்று ஈசநாட்டு கள்ளர் சமூகத்தினர் மண்டகப்படியன்று சிம்ம வாகனத்திலும்,  ஞாயிற்றுக்கிழமையன்று வடகரை வர்த்தக சங்கத்தார் மண்டகப்படியன்று புஷ்ப பல்லக்கில் சிம்ம வாகனத்திலும், 9ம் நாளான வரும் செவ்வாய்கிழமையன்று மகாத்மா காந்திஜி தெரு பொதுமக்கள் மண்டகப்படியன்று சட்டத்தேரிலும் அம்மன் வீதிவுலா நடைபெறும்
. 15ம் தேதியன்று  சுப்பிரமணிய சாவடி வேளாளர் சங்கத்தினரின் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்தலும், நடைபெறும். அதனை தொடர்ந்து பரமசிவம் மண்டகப்படியன்று சுவாமிகள் வேஷமிட்டு ரத ஊர்வலம் நடைபெறும். 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்