முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகள் 100பேருக்கு 100கறவை மாடுகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் ரூ.27.5லட்சம் மானியத்தில் பயனாளிகள் 100பேருக்கு 100கறவை மாடுகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.

கள்ளிக்குடி வட்டாரத்தில் குராயூர்,மொச்சிகுளம் மற்றும் பேய்க்குளம் ஆகிய கிராமங்களில் தமிழக வேளாண்மை துறையின் மூலமாக தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் பயனாளிகளுக்கு மானிய விலையில்கறவை மாடுகள் வழங்கிடும் விழா சிறப்பாக கள்ளிக்குடி காவல்நிலையம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு மதுரை  மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.வேளாண்துறை இணை இயக்குனர் ஸ்ரீதர்,துணை இயக்குனர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண் இணை இயக்குனர் சே.கனகராஜ் வரவேற்று பேசினார். நூற்றுக்கணக்கான பயனாளிகள் பங்கேற்று பயனடைந்த இந்த விழாவில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் ரூ.27.5லட்சம் மானியத்தில் (50சதவீதம்)பயனாளிகள் 100பேருக்கு 100கறவை மாடுகளையும்,கால்நடைகளின் தீவனத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இவ்விழாவில் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்செல்வம்,திருப்பதி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி எம்.கே.மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,கள்ளிக்குடி அவைதலைவர் வேல்பாண்டி,துணை செயலாளர்கள் பிரபுசங்கர்,கண்ணன்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,மாவட்ட பிரதிநிதி வேல்ராமகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சீதாமதிகந்தசாமி, சின்னஇருளப்பன் கட்சி நிர்வாகிகள் கூடக்கோவில் முருகன்,வில்லூர் சரவணன், ரவி,ஐ.டி.பிரிவு சிங்கராஜ்பாண்டியன்,மணி,ராஜா,மனோகரன்,மருது,ராமையா மற்றும் கள்ளிக்குடி வேளாண் உதவி இயக்கனர் மு.சுமதி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்