முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் 96,600 பயனாளிகளுக்கு ரூ.129 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2016ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேற்று (07.03.2017) வழங்கினார்.

 

வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இவ்விழாவில் கலந்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 92,916 விவசாயிகளுக்கு ரூ.109.34 கோடி நிவாரணத் உதவி தொகையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.23,03,600 மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நரிகுறவர் நல வாரியத்திலிருந்து 81 நரிக்குறவர்களுக்கு தனி நபர் மானிய உதவித்தொகையாக ரூ.6,07,500ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக மேலகபிஸ்தலம் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசு வழங்கிய ரூ.10 இலட்சத்திற்கான காசோலையும், சமூக நலத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலை 3560 பயனாளிகளுக்கு ரூ.19.75 கோடி மதிப்பீட்டிலும், கால்நடைத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு உலர் தீவனம் ரூ.36.54 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணையும் ஆக மொத்தம் 96,600 பயனாளிகளுக்கு ரூ.129.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கி பேசியதாவது,

தஞ்சாவூர் மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா கடந்த 2012-13ம் ஆண்டு வறட்சி நிவாரணம் அறிவித்து விவசாயிகளை பாதுகாத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட தமிழக அரசு உயர் மட்டக் குழு அமைத்து ஒவ்வொரு கிராமமாக சென்று ஆய்வு செய்து, அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின்படி தமிழக அரசு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 92,916 விவசாயிகளுக்கு ரூ.109.34 கோடி வறட்சி நிவாரண உதவித் தொகை வழங்கப்படுகிறது. வறட்சி நிவாரண உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திட தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற அம்மா அவர்களின் வழியில் வந்த இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், ஆவின் தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், சமூக நலத்துறை அலுவலர் பாக்கியலெட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்