முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 179 கோடியே 27 லட்சம் மதிப்பிலான வறட்சி நிவாரண உதவித்தொகை : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குதல், உலர் தீவனக்கிடங்குகள் திறப்பு விழா மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வங்கிக்கடன் மான்யம் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் இல.நிர்மல்ராஜ், தலைமையில் நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் விழாவில் கலந்து கொண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்து 33 ஆயிரத்து 769 விவசாயிகளுக்கு ரூ. 179 கோடியே 27 இலட்சம் மதிப்பிலான வறட்சி நிவாரண உதவித்தொகை, இரண்டு புதிய உலர் தீவனக்கிடங்குகள் மற்றும் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வங்கிக்கடன் மான்யம் ஆகியவற்றை வழங்கினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கோபால் முன்னிலை வகித்தார்.

 

உணவுத்துறை அமைச்சர் பேசியதாதவது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி ரூ. 20 கோடியே 29 லட்சம் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்கள்.அதனைத்தொடர்ந்து ரூ.25 கோடியே 70 லட்சம் மதிப்பில் சம்பா தொகுப்பு திட்டத்தையும் செயல்படுத்தினார்கள்.

தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிதொகை வழங்கிட தமிழக முதலமைச்சர் ரூ. 2,247 கோடி பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவிதொகை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிதொகையாக ரூ.179 கோடியே 27 இலட்சம் நிவாரண உதவிதொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 33 ஆயிரத்து 769 விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் ஒருவாரகாலத்திற்குள் செலுத்தப்படும்.

திருவாரூர் மாவட்டதிலுள்ள கால்நடைகள் பயன்பெறும் வகையில் இரண்டு உலர் தீவண கிடங்கு ரூ.37 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கோட்டூர் மற்றும் வேப்பஞ்சேரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்பில் பசுந்தீவண சோளம் 400 ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 101 மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரியும் பொருட்டு வங்கிக்கடன் மான்யத்தொகை தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 10 இலட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) ரவிந்திரன், வருவாய் கோட்டாச்சியர்கள் (திருவாரூர்) முத்துமீனாட்சி, (மன்னார்குடி) செல்வசுரபி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாள் (பொது) ராஜகோபாலன், கமலாம்பிகா கூட்டுறவுச்சங்கத்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, திருவாரூர் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எஸ்.கலியபெருமாள், மாங்குடி உழவர் கூட்டுறவுச்சங்கத்தலைவர் பி.கே.யு.மணிகண்டன் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்