முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கருவேல மர ஒழிப்பு பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த 15 வார்டுகளிலும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் கருவேல மரங்கள் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கருவேல மரங்களை ஒழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரவி முன்னிலையில் பேரூராட்சி சார்பாக கருவேல மரங்கள் அழிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அரசு இடங்களை தவிர தனியார் இடங்களில் அதிக அளவு கருவேல மரங்கள் கும்மிடிப்பூண்டியில் இருப்பதால் பேரூராட்சி சார்பாக மேற்கண்ட கருவேல மரங்களை ஒழிக்க நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் கருவேல மரங்களை தனியார்கள் அகற்றாவிட்டால் பேரூராட்சி நிர்வாகமே அவற்றை அகற்றுவதோடு, அதற்கான செலவை தனியார்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தெரிவித்தார்.
மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதோடு, அவரவர் பகுதியில் விரைந்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பேரூராட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்