முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் வறட்சி நிவாரணத் திட்டத்தின் சார்பில் உலர் தீவன கிடங்கு

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெதப்பம்பட்டி கால்நடை மருந்தகத்தில்,கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விவசாயிகளுக்கான உலர் தீவன கிடங்கினை   மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி.  முன்னிலையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன்  துவக்கி வைத்து  விவசாயிகளுக்கு உலர் தீவனங்களை வழங்கினார்.

உலர் தீவன கிடங்கு

                    உலர்தீவன கிடங்கினை  துவக்கி வைத்து விவசாயிகளுக்கு தீவனங்களை வழங்கி      வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  பேசியதாவது-மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு விவசாயிகளுக்காக சிறப்பான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை பேணிக்காப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசு கால்நடைகளின் நலத்தின்பால் மிகுந்த அக்கறை கொண்டு, கால்நடைகளின் நலமும், பால் உற்பத்தியும், இறைச்சி உற்பத்தியும் அதிகரிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ளும் வண்ணம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனத்தை அளிப்பதற்காக மாநிலத்தில் 300 உலர்தீவனக் கிடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதன மூலம் உலர்தீவனம் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் 10 உலர்தீவனக் கிடங்குகள் தலா ரூ.18.27 லட்சம் செலவில் மொத்தமாக ஒரு கோடியே எண்பத்து இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

 

         மேலும், இத்தீவனக்கிடங்குகள் பெதப்பம்பட்டி, குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், செங்கப்பள்ளி, சேவூர், பல்லடம் ஆகிய 10 இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.        இக்கிடங்குகளின் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 62000 கறவை மாடுகளுக்கு 2 கிலோ வீதம் தாது உப்புக்கலவை ரூ. 86.24 லட்சம் செலவில்                                           இலவசமாக வழங்கப்பட உள்ளது.   இது தவிர சிறிதளவேனும் தண்ணீர் பாசன வசதி உள்ள விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  600 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிரிடவும் அதற்கான ஏக்கருக்கு 16 கிலோ சோள விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு, சாகுபடி செய்வதற்கான தொகை ரூ.2000 மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் 525  விவசாயிகளுக்கு இதற்காக   9600  கிலோ சோளமும், மானியமாக வழங்கப்பட உள்ளது.   உலர் தீவனக்கிடங்கிற்கு  ரூ.182.70 லட்சமும், தாது உப்புக்கலவைக்கு ரூ.86.24 லட்சமும், தீவனச் சோளம் சாகுபடிக்கு ரூ.18.72 லட்சமும் என மொத்தம் ரூ.287.66 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது இதனைப் பெற்றுக் கொண்டு கால்நடை வளர்க்கும் விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் இருக்க வேண்டும் என  அமைச்சர்  பேசினார்கள்.

 

               முன்னதாக பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு அகத்திக்கீரை மரக்கன்றுகளையும்  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  வழங்கினார்கள்.

                   இந்நிகழ்வின் போது, பொள்ளாச்சி பராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ,மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ்பச்சாவு.,திருப்பூர் சார் கலெக்டர் ஸ்ரவன்குமார். உடுமலை கோட்டாட்சியர் சாதனைகுறள்,  கால்நடை  பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.அ.முருகன், உடுமலை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.அன்வர்தீன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.மாரீஸ்வரன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு.தங்கவேலு, மரு.அர்ச்சுனன், மரு.ஆறுமுகம், மரு.சிகாமணி, மரு.குமாரரத்தினம், மரு.ராமசாமி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.அரவிந்த், மரு.ரவி, மரு.இளங்கோ, மரு.தீபா, மரு.பாலகிருஸ்ணன், மரு.நாகராஜ், மரு.கணேசமூர்த்தி, மரு.வெங்கடேஸ், மரு.குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்  மற்றும் மாணவ மாணவியர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago