முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தலைமையில் கோவை பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வளர்ச்சி திட்டங்கள்

 நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  தெரிவிக்கையில், “ புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. குறிப்பாக  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு தமிழகத்திலேயே இரண்டாவதாக அதிகமாக நிதி ஒதுக்கியது நமது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கே, அதாவது ரூ.184 கோடி அளவில் தமிழக அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி, திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும், தமிழகத்தில் முதன்முறையாக 162 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற வறட்சி காணப்பட்டுள்ளது. இருப்பினும்  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளும், பல்வேறு நிவாரண நிதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பருவமழை குறைவாக உள்ளதால், பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியும் போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால்இ குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின்  மூலம்  கூடுதலாக குடிநீர்  விநியோகம்  வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தற்போது குறிச்சி பகுதி, குனியமுத்தூர் பகுதிக்கும்  குடிநீர்  விநியோகம்  வழங்கப்பட்டு வருகிறதுமேலும், பருவமழை இல்லாத காரணத்தினால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து, குறைந்த பட்ச நீர் இருப்பின் கீழ் சென்றுவிட்டது. இருப்பினும்  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு சீறிய முயற்சியின் காரணமாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி. டெட் ஸ்டோரேஜ் (னுநயன ளுவழசயபந) சிறுவாணி அணையிலிருந்து பம்பிங் செய்து நாளொன்றுக்கு சுமார் 15 மில்லியன் லிட்டர் வீதம் கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்கள், பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வாட்டர் டிவைனர்களை (றுயவநச னுiஎiநெச) கொண்டு நீர் ஆதாரம் எங்கு உள்ளதோ அந்த இடத்தில் போர் வெல் அமைத்து சீரான நீர் எடுக்க ஆவண செய்யுமாறு அனைத்து துறை பொறியாளர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

 

 

இதற்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  கோவை மாநகராட்சியில் பணிகாலத்தில் மரணமடைந்த மாநகராட்சிப் பணியாளர்களின் 39 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிஹரன்  , மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  , நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜ் , பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்.கே.அர்ஜுனன் , ஏ.சண்முகம் , மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ் , சார் கலெக்டர் (பொள்ளாச்சி) ப.காயத்ரி கிருஷ்ணன்  , துணை ஆணையாளர் ப.காந்திமதி , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நிர்வாக பொறியாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்