முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு

புதன்கிழமை, 8 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு  - மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

துப்பாக்கிச்சூடு
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 6-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் பாக் வளைகுடாவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அன்று இரவு அங்குவந்த இலங்கை கடற்படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சரோன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் மறுப்பு
பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்து உள்ளநிலையில் இலங்கை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்து வருகிறது. மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. தளபதியின் கட்டளையை மீறி எந்தஒரு வீரரும் துப்பாக்கியை பயன்படுத்த மாட்டார்கள் என இலங்கை கடற்படை கூறிஉள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இதுவரையில் 85 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 146 படகுகள் தங்கள் வசம் உள்ளது என்றும் இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்