முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச் 1B விசாவை தொடர்ந்து அமெரிக்காவில் ஹெச் -4 விசாவில் பணியாற்றுபவர்களுக்கும் தடை வருகிறது

புதன்கிழமை, 8 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்காவில் ஹெச் 1B விசா ரத்தை தொடர்ந்து ஹெச் -4 விசாவில் பணியாற்றுபவர்களுக்கும் தடை வருகிறது

அமெரிக்கர்களுக்கே ...
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் அந்த நாட்டில் பணியாற்றி வரும் வெளிநாட்டினருக்கு செக் வைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவிற்குள் நுழைய முஸ்லிம் நாடுகளுக்கு தடை விதித்தார். பின்னர் இந்தப் பட்டியலில் இருந்து ஈராக்கிற்கு மட்டும் விலக்களித்தார்.

ஹெச் - 1B விசா ரத்து
 அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டுக்கு கால் சென்டர் வேலைகளை கொண்டு செல்வதற்கும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார். அடுத்தது, அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு ஹெச் - 1B விசா வழங்குவது ரத்து செய்யப்படும் என்று சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தற்போது, ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணவன் அல்லது மனைவியுடன் செல்பவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது இந்த விசாவுக்கும் அமெரிக்கா கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

ஹெச் -4 விசா
அமெரிக்க நீதித்துறை வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ஹெச் -4 விசா பெற்று பணியாற்றி வருபவர்களின் வேலைக்கான அதிகாரத்தை 60 நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையும் இல்லை
கடந்த ஒபாமா ஆட்சியில் இவர்கள் பணியாற்றுவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த உரிமையையும் கடந்த 2015ல் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றுபவர்கள் தங்களது கடின போராட்டத்தின் மூலம் போராடியே பெற்றனர். இதுதொடர்பாக ஒபாமா அரசு வெளியிட்டு இருந்த சட்டத்தை எதிர்த்து சேவ் ஜாப் என்ற பெயரில் மீண்டும் நீதிமன்றத்துக்கு சென்றனர். ஆனால், நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. கணவனோ, மனைவியோ க்ரீன் கார்டு பெறும் வரை ஹெச்- 4 விசா பெற்று வெளிநாட்டினர் பணியாற்றலாம் என்று அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிரம்ப் முயற்சி
தற்போது இதற்கும் வேட்டு வைக்கும் வகையில் டொனால்டு டிரம்ப் அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தடை வரும்போது, ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது வேலையை இழப்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்