முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

புதன்கிழமை, 8 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸப்த விழாக்களின் 7-ம் நாள் நிகழ்வாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் மகளிர்தின விழா கல்லூரி நிறுவனர் பா. முனிரத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி செயலரும் திருவள்ளுவர் பல்கலைகழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான எம். இரமணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் எம்.எச்.எஸ்.முகமது யாகூப் வரவேற்புரையாற்றினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார். விழாவில் விழுப்புரம் ஷபானா கைவினைப் பொருட்கள் தொழிலகம் நிறுவனர் ஷகிலா பரூக் கலந்து கொண்டு மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.அவர்பேசும் போது எனது கணவருடன் அரசாங்க நிதிஉதவியுடன் 2 பெண்களுடன் தொடங்கி தற்போது 70 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் எனது நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.நீங்கள படித்து முடித்த பிறகு வேலைக்காக காத்திராமல் ஏதாவது சிறு தொழிலை கற்றுக் கொண்டால் நீங்கள் உருவாக்கும் பொருளை தரமானதாக உருவாக்கினால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.எனவே எதிர்காலத்தில் வேலை தேடும் பெண்களாக இல்லாமல் வேலை கொடுக்கும் பெண்களாக மாறுங்கள் என சிறப்புரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் பிரபாகரன் மற்றும் அரிமா ஆர்.சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை ரம்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் உதவி பேராசிரியை பைரோஸ் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்