முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளீர் தினவிழா கொண்டாட்டம்:எம்எல்ஏ ரவி சான்றிழ்கள் வழங்கினார்

புதன்கிழமை, 8 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

மகளீர் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தையல் பயிற்சி முடித்த 60 பேருக்கு சான்றிழ்களை வழங்கி உரையாற்றினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் தனியார் விடுதியில் மகளீர் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய அளவிலான கல்வி மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனத்தின் சார்பில் உலக மகளீர் தின விழா, சிறப்பு கலை நிகழ்ச்சி மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெஸ்ட் இயக்குனர் குமாரி தணிகாசலம் தலைமை தாங்கினார். தனலட்சுமி மனோகரன், விமலா பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி, மற்றும் அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தையல் பயிற்சி முடித்த 60 பேருக்கு சான்றிழ்களை வழங்கி பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி பேசிய போது. ஆரம்பத்தில் இந்த குழுவை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று 204 குழுக்களுடன் பலமிக்க மகளீர் இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சிகளில் மகளீர் பங்கு இருக்க வேண்டுமென 50 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றினார். ரூஇரண்டரை கோடியில் திடகழிவு மேலாண்மை பணி திட்டம் அரக்கோணம் நகரத்திற்கு வர இருக்கிறது அதில் உங்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல் வங்கிகளில் பிரச்சனைகள் என்றால் அண்ணன் துரைகுப்புசாமி அல்லது என்னை சந்தியுங்கள் தீர்த்து வைக்கப்படும் என்று பேசினார். நிகழ்வில் கீழ்குப்பம் முனைவர் ஏஎல்.நாகராஜன், அம்பத்தூர் சுப.தென்பாண்டியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசரியர் எட்வர்ட், வங்கி இயக்குனர் பாளையம், உள்ளிட்ட நூற்றுகணக்கான மகளீர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மண்வாசல் கலைகுழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மாநில செயலாளர் திருவள்ளுர் வசந்தி இறுதியில் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago