நாமக்கல் மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, 24,224 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு தகவல்

புதன்கிழமை, 8 மார்ச் 2017      நாமக்கல்
2

 

நாமக்கல் மாவட்டத்தில் 10 -ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று காலை (08.03.2017) தொடங்கி நடைபெற்று வருகின்றது. நாமக்கல், நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நேற்று 08.03.2017 முதல் 30.03.2017 வரை 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு (10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அரசுப்பள்ளிகள், நகரவை பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், சுயநிதிபள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகள் ஆகிய 309 பள்ளிகளைச் சேர்ந்த 12,584 மாணவர்கள், 11,119 மாணவியர்கள் என மொத்தம் 23,703 மாணவ, மாணவியர்களும், 521 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24,224 மாணவ, மாணவியர்கள் 83 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு (ளுளுடுஊ)) அரசு பொதுத்தேர்விற்காக 10 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 10 கூடுதல் வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 18 வழித்தட அலுவலர்கள், 18 வழித்தட அலுவலர்களின் உதவியாளர்கள், 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 83 துறை அலுவலர்கள், 21 கூடுதல் துறை அலுவலர்கள், 1840 அறை கண்காணிப்பாளர்கள், 83 எழுத்தர்கள், 83 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 200 பறக்கும் படை உறுப்பினர்கள், 5 துணை ஆட்சியர்கள் நிலையிலான பிறதுறை அலுவலர்கள் என மொத்தம் 2475 நபர்கள் இத்தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறுகின்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை மிகச்சிறப்பாக எழுதிட வேண்டுமென எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: