முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர் படுகொலையை கண்டித்து ராமநாதபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

புதன்கிழமை, 8 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை வக்கீல்கள் சங்கத்தினர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் முன்புறம் மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்தும், மீனவர் பிரச்சனைக்கு மத்திய-மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் தங்கராஜ் தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க துணை தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் கேசவன், இணை செயலாளர் மோகன்பாபு, மூத்த வக்கீல்கள் நடராஜன், நம்புநாயகம், சந்திரன், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் வில்வகுமார், உஷாதேவி, சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் முருகபூபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

      இதில் சேக்இப்ராகிம், அப்துல்ஹாலித், முகைதீன்இப்ராம்சா உள்பட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் சலீம் நன்றி கூறினார். மீனவர் படுகொலை சம்பவத்திற்கு உரிய முடிவு எட்டப்படாவிட்டால் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக செயற்குழு உறுப்பினர் முரகபூபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்