முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் கலெக்டர் நடராஜன்; துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தின்கீழ் விவசாயிகளிடம் உலர் தீவனத்தினை கலெக்;டர் முனைவர் நடராஜன் வழங்கி தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டையில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பாக தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள உலர் தீவன மையத்தினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன்  துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான உலர் தீவனம் (வைக்கோல்) மற்றும் தாதுஉப்புகள் கலவையினை வழங்கினார். ஆப்போது அவர் பேசியதாவது:- கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரண திட்டம் 2016-2017-ன் கீழ் வட்ட வாரியாக 7 மையங்கள் முறையே கமுதி, முதுகுளத்தூர், நயினார்கோயில், சாயல்குடி, உச்சிப்புளி, சூரங்கோட்டை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவன கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு உலர் தீவன கிடங்குகளுக்கும் தலா ரூ.18.57 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.129.99 லட்சம் உலர்தீவனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கால்நடைகளுக்கு தேவையான உலர் தீவனமான வைக்கோல் மானிய விலையில் 1 கிலோ ரூ.2 வீதம் 1 விவசாயிக்கு ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை வழங்கப்படவுள்ளது. 

மேலும் இத்திட்டத்தில் பாசன வசதி உள்ள விவசாயிக்கு தீவன சோள விதைகள் வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர கால்நடைகள் ஊட்டச்சத்திற்கென்று தாது உப்புகள் கலவையும் விலையில்லாமல் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு பேசினார். அதன்பின்பு மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் உலர் தீவனம் வழங்குவது தொடர்பான பதிவு அட்டையினை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.தி.மோகன், உதவி இயக்குநார் மரு.தனிக்கொடி, சிறப்பறிஞர் மரு.ஆர்.இராதா கிருஷ்ணன், உதவி மருத்துவர் மரு.ஆர்.ஜெயபிரகாஷ் உள்பட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்