முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்ரூ. 80 மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படும் :செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      சேலம்

 

சேலம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கால் நடைபராமரிப்பு துறையின் மூலம் கொங்கணாபுரம் கால்நடை மருத்துவ மனையில் விவசாயிகளுக்கும் ரூ80 மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படுவது குறித்தும் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடுகள் குறித்தும் செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது இச்செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது. தமிழக அரசால் வேளாண்மை உற்பத்தி பெருக்கவேண்டும் என்ற நோக்கில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளபடியால் விவசாயிகள் தீவனப்பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சேலம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் சிரமமின்றி கால்நடைகளை பராமரிக்க, உலர் தீவனம் மிகுதியாக உள்ள பகுதிகளிலிருந்து அவற்றை வாங்கி மானிய விலையில் கால்நடை வளர்ப்போர்க்கு உலர் தீவன கிடங்குகள் மூலம் 90 முதல் 120 நாட்கள் வரை அல்லது தற்போது நிலவும் வறட்சி நிலைமை முடியும் ஜுன் மாதம் வரை விநியோகம் செய்ய தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு ஒரு கிடங்குக்கு 18,27,000 ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து 80ரூ மானியத்தில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 10 ரூபாய் விலைமதிப்புல்ல உலர் தீவனம் 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு மாட்டுக்கு 3 கிலோ வீதம் 7 நாட்களுக்கு தேவையான உலர் தீவனம் ஒரே நாளில் 42 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 5 மாடுகளுக்கு உலர் தீவனம் மானிய விலையில் வழங்கப்படும். ஒரு கிடங்கிற்கு 1000 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் கால்நடை மருந்தக கிடங்கில் உலர் தீவனம் மானிய விலையில் கால் நடைகளுக்கு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இன்று முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உலர் தீவனம் கிடங்களிலும் உலர் தீவனம் வழங்கப்படும். நாட்டின மாடுகள் அதிக அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த செயற்கை முறை கருவூட்டம் 20 ஒன்றியங்களில் கருவூட்டம் இலவசமாக செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் மார்ச் 1 முதல் மார்ச் 21 வரை 6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மேற்கொள்ள நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கீழ்க்குறிப்பிட்டுள்ள 37 இடங்களில் உள்ள உலர் தீவனக் கிடங்குகளில் அமைத்து மானிய விலையில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு உலர் தீவனம் 80ரூ மானியத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதன் அடிப்படியில் சேலம் கோட்டத்தில் குள்ளம்பட்டி, கால்நடை மருந்தகம் பனமரத்துப்பட்டி, கால்நடை மருந்தகம் நரசோதிப்பட்டி, கால்நடை மருந்தகம் உத்தமசோழபுரம், கால்நடை மருத்துவ மனை,ஏற்காடு, கால்நடை மருந்தகம் சேசன்சாவடி, கால்நடை மருந்தகம் துக்கியாம்பாளையம், கால்நடை மருந்தகம் சித்தர்கோயில், கால்நடை மருந்தகம் நீர்முள்ளிக்குட்டை, கால்நடை மருத்துவமனை வீரபாண்டி ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆத்தூர் கோட்டத்தில் கால்நடை மருந்தகம் பெத்தநாயக்கன்-பாளையம், கால்நடை மருந்தகம் தும்பல், கால்நடை மருத்துவ மனை, ஆத்தூர், கால்நடை மருந்தகம் மல்லியகரை, கால்நடை மருந்தகம் தம்மம்பட்டி, கால்நடை மருந்தகம் காட்டுக்கோட்டை, கால்நடை மருந்தகம் நடுவலூர், கால்நடை மருந்தகம் தலைவாசல், கால்நடை மருந்தகம் கல்பகனூர், கால்நடை மருந்தகம் சிறுவாச்சூர், கால்நடை மருந்தகம் வீரகனூர் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது.சங்ககிரி கோட்டத்தில் கால்நடை மருத்துவ மனை, எடப்பாடி, கால்நடை மருந்தகம் கொங்கணாபுரம், கால்நடை மருந்தகம் மகுடஞ்சாவடி, கால்நடை மருந்தகம் சங்ககிரி, கால்நடை மருந்தகம் அன்னதானப்பட்டி, கால்நடை மருந்தகம் சித்தூர், கால்நடை மருந்தகம் வெள்ளாளபுரம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும், விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவ மனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில், சேலம் - 636 001, தொலைபேசி எண். 0427-2451721 என்ற அலுவலக முகவரிக்கு தொடர்பு கொண்டு கால்நடை வளர்ப்போர் சிரமமின்றி கால்நடைகளை பராமரித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார். இச்செய்தியாளர் பயணத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயச்குநர் லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.சதிஸ்குமார், உதவி இயக்குநர்கள் புகழேந்தி, சண்முகம், மாணிக்கம், பழனியப்பன், கால்நடை அறிஞர். தேவேந்திரன் செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago