முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உப்பை குறைத்தால் மாரடைப்பு வருமாம் ! கனடா பல்கலை கழகம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

ஒட்டாவ  - உப்பை தொடர்ந்து குறைவாக உட்கொண்டு வந்தால் மாரடைப்புக்கான ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்வது உடல் நலனுக்கு தீங்கானது என காலம்காலமாக கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக ஒவ்வொருவரும் தற்போது எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை அதிகரிப்பது அவசியம் என்று கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தலைமையி லான இந்த ஆய்வாளர்கள், “நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவை, உடல் நலனுக்கான வழிகாட்டு நெறிகள் குறைவாகவே பரிந்துரை செய்துள்ளன. இதனால் மாரடைப்புக்கான சாத்தியக் கூறு அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பெரியவர்கள் தினமும் 5 கிராமுக்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதுபோதுமானதல்ல என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.  இதுகுறித்து மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் சலீம் யூசுஃப் கூறியபோது, “உப்பை குறைவாக எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் தீங்கு ஏற்படவே வாய்ப்புள்ளது. ஒருவர் 3 கிராமுக்கு குறைவாக சோடியம் உட்கொள்வதால் அவருக்கு மாரடைப்பு, இதயக் கோளாறு மற்றும் மரணத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. உப்பின் அளவை மிகவும் குறைத்தால், உடலின் இயற்கைச் சமநிலை பாதிக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்