முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி அருகே பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்ப விழா

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      வேலூர்

ஆரணி அடுத்த ஒண்ணுபுரத்தில் மகளிர் தினம் முன்னிட்டு பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்ப விழா நடைபெற்றது. ஆரணி பட்டு கைத்தறி பூங்கா சார்பில் உலக மகளிர் தினம் முன்னிட்டு ஆரணி அடுத்த ஒண்ணுபுரத்தில் பாரம்பரிய தொழில் திறனை அங்கீகரித்தல் திட்டத்தின்கீழ் ஆரணி பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் ஒண்ணுபுரத்திலுள்ள பட்டு உற்பத்தியாளர்களான பி.வி.புவனேஸ்வரி,ஜி.தேவிகா, என்.ராஜேஸ்வரி, பி.மகேஸ்வரி ஆகியோர் இவ்விழாவினை துவக்கி வைத்து பட்டு சேலையின் தரம், உற்பத்தி திறன் மற்றும் பெண் தொழில் முனைவோர் குறித்து உரையாற்றினர். இதில் அரசு மருத்துவர் எம்.பிரபவராணி கலந்துகொண்டு ஆரோக்கியம்,சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்கள் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். பெங்களூர் கார்பரேட் பயிற்சியாளர் எம்.கோகிலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை பண்புகள், தொடர்பு கொள்ளும் திறன், நேர மேலாண்மை மற்றும் குழுவாக பணிபுரிதல் ஆகிய மென்திறன்கள் குறித்து பேசினார். ஆரணி பட்டு கைத்தறி பூங்கா இயக்குநர் எச்.ரகுபதிராமசாமி இப்பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்