முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் சாதனைக்காக பேஸ்-புக்கை உருவாக்கிய மார்க் ஜூக்கர் பெர்க்குக்கு டாக்டர் பட்டம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - படிப்பை பாதியில் நிறுத்திய ‘பேஸ்-புக்’ அதிபரின் தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

பணகாரப் பட்டியலில்...
பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் ஷூக்கர் பெர்க். அவர் இந்த வலைத்தளம் தொழில் மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து உள்ளார். இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். சமூக வலைத்தளத்தை தொடங்கிய அவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெளியே வந்து விட்டார்.

கவுரவ டாக்டர் பட்டம்
அவர், தொழில் தொடங்கி வெற்றிகரமான நபராக மாறி விட்டாலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியாமல் போய் விட்டதே? என்ற ஏக்கம் அவருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அவருடைய தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த பட்டமளிப்பு விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பட்டமளிப்பு உரை நிகழ்த்தும் கவுரவத்தையும் அளித்துள்ளனர்.

மகிழ்ச்சியில் மார்க்...
எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியாமல் போனதோ அதே பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஷூக்கர் பெர்க் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்